Nature
அந்தி சாயும் நேரத்தில் கடற்கரை ஓரத்தில் சூரியன் மறையும் காட்சியை பார்க்கும் போது மனமும் பாரத்தை இழக்க செய்கிறது.பணிச்சுமைகள் இருப்பினும் பணிகள் முடித்து விடுமுறை நாட்களில் பெற்றோர்கள் குழந்தைகளுடன் கூடி மகிழ்ந்து இருப்பது குழந்தைகளுக்கு மட்டுமில்லாமல் பெற்றோர்களுக்கும் கவலையை போக்கி மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.மேலும் அவர்களை புத்துணர்ச்சி அடையச் செய்கிறது.கடலில் இவ்வளவு அழகாக உள்ள மீன்களின் காட்சியை நாம் நம் வீடுகளில் மின் தொட்டியில் மீன்களை வளர்த்து மகிழ்கிறோம்.செயற்கை என்ற பெயரில் இயற்கை என்ற அடையாளத்தை தொலைத்துக் கொண்டிருக்கிறோம்.உயிருக்கு ஆதாரமாக உள்ள உணவுக்கு மேலாக விளங்கக்கூடிய நீரினை இன்றைய காலக்கட்டத்தில் உள்ள மக்கள் சேதப்படுத்தி வருகின்றனர்.மலையின் உயரத்தில் மாலை நேரத்தில் சூரியன் மடிவதை காணும் போது மனமும் கவலை என்னும் சிறையில் இருந்து மடிகிறது.     மேலும் மகிழ்ச்சியை கொடுக்கிறது.சில்லென்று வீசும் தென்றல் காற்றில் சில மணித்துளிகள் பயணிக்கும் போது தன்னை மறந்து உடலும் சிலிர்க்கிறது.

Comments